Home » » நாட்டு மக்களுக்கு பிரதமர் மகிந்த இன்று மாலை வழங்கப்போகும் விசேட அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு பிரதமர் மகிந்த இன்று மாலை வழங்கப்போகும் விசேட அறிவிப்பு


 பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு இன்று இரவு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். 

இன்று மாலை  06.45 மணிக்கு  பிரதமரின் உரை இடம்பெறவுள்ளது. 

பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடி இலங்கை அரசியலிலும் பாரிய மாற்றங்களை தோற்றுவித்துள்ள நிலையில், அரசுக்கெதிரான பொதுமக்களின் போராட்டங்களும் வலுத்துள்ளன. 

இந்த நிலையில் அரசின் தலைமைப் பதவியில் இருப்பவர்களும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவேண்டும் என்ற கோஷம்  தொடர்ந்து ஒலிக்கின்றது. 

இதேவேளை, முக்கிய தலைவர்கள் சிலர் பதவி விலகலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்ற நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகத் தீர்மானித்ததாகவும், அதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த நிலையில் இன்றைய பிரதமரின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |