மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் பெண்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட பெண்கள் நிறுவன வலையமைப்பு மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண் உறுப்பினர்கள் ஒன்றியமும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று காலை 9 மணிக்கு ஒன்று திரண்ட நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
“அரிசி, பால்மா, மின்சாரம், பெட்ரோல், மருந்து, பசளை இல்லை ஆனால் உனக்கு உண்டு”, “பசில் ஆட்சி வேண்டாம் மக்கள் ஆட்சி வேண்டும்”, “கோ
ட்டாபய போ நாட்டை தா”, “ஊழல் நிறைந்த ஆட்சி இன்றுடன் முடியட்டும்”, போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சுமார் 2 மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments: