பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதி தடையில் நேற்று (05) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணையின் முன்னேற்றத்திற்கு ஏற்ப மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ ஊடகப் பிரிவு நேற்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
கடந்த 5ஆம் திகதி பிற்பகல் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள வீதித் தடைக்கு இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் சென்றபோது, தவறாக நடந்துகொண்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்று இராணுவ தளபதி இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார்
0 comments: