Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கோட்டாபயவின் அலுவலகத்திற்கு முன்னால் பதற்றம்- கலகமடக்கும் காவல்துறை களத்தில்!

 


சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி அவரது அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெருமளவான மக்கள் திரண்டு அரச தலைவர் செயலகத்தை முற்றுகையிட்டு பாரிய எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததோடு, அலுவலகத்திற்குள்ளும் நுழைய முற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாரிய ஆர்ப்பட்டம் காரணமாக அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு கலகமடக்கம் காவல்துறையினர் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் காலி முகத்திடலிலும் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments