புத்தாண்டு காலப்பகுதியிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் ஆர்ப்பாட்டங்களை நிறுத்தப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
தகுதியான அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தும்வரை போராட்டம் தொடரும் என அனுரகுமாரதிசநாயக்க மஹரகம ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை இராஜினாமா செய்யக்கோரி 20மில்லியனிற்கும் அதிகமான மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர்,அரசமைப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அரசாங்கம் ஆட்சியில் நீடிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் இயக்கம் வலுவிழப்பதற்காக புதுவருடத்திற்காக அரசாங்கம் காத்திருக்கின்றது ஆனால் மக்களின் போராட்டம் புத்தாண்டிற்காக நிறுத்தப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments