ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மந்திராலோசனை நடாத்தி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் குறித்து இந்த அவசரக் கூட்டத்தில் கலந்துரையாடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்றுள்ளார்.
மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
எனினும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது
0 Comments