சிலாபத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஒரு குழுவிற்கும் அரசாங்கத்திற்கு எதிரான குழுவிற்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையிலான அரச சார்பு செயற்பாட்டாளர்கள் புத்தளம் நோக்கி பேரணியாகச் சென்ற போது, ஐக்கிய தேசியக் கட்சி குழுவை சேர்ந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களும் எதிர்கொண்டு மோதலில் ஈடுபட்டதையடுத்து பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
0 Comments