நாங்கள் தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம். ஆனால் இப்போது தேர்தலை நடத்த முடியாது. எனவெ இடைக்கால ஏற்பாடொன்றுக்கு செல்வதே அவசியமாகும். எனவே ஜனாதிபதி பதவி விலகிச் செல்ல வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இவ்வாறானதொரு நெருக்கடியான நிலைமை இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை. மக்கள் புத்திசாலிகள். மக்களை இந்த இடத்திற்கு அரசாங்கமே தள்ளியது.
வரிகளை நீக்கி பணத்தை அச்சடித்து நாட்டை அழித்துவிட்டனர். இரசாயன உரத்தை தடை செய்து விவசாயத்தை அழித்துவிட்டனர். எனவே 21 மில்லியன் மக்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
அந்த மக்களுகு்கு அரசாங்கத்தின் மீது கடுமையான வெறுப்பு காணப்படுகின்றது. அதனால்தான் எப்போதுமில்லாதவாறு மக்கள் வீதிக்கு இறங்கி போராடுகின்றனர்.
இதற்கு முன்னர் எந்த ஜனாதிபதியோ அரசாங்கமோ இவ்வாறு விமர்சனத்திற்கு உட்படவில்லை. இந்த நெருக்கடி நேரத்தில் நாட்டை மீட்டெடுக்கும் செயற்பாட்டை நூறு சதவீம் என்னால் செய்ய முடியும்.
நானே மங்கள சமரவீர எம்.பியுடன் பெல்ஜியம் சென்று ஐரோப்பிய ஒன்றியத்தில் பேச்சுவார்த்தை நடத்தி ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை கொண்டுவந்தேன்
0 Comments