Advertisement

Responsive Advertisement

இரத்தம் சொட்ட சொட்ட மக்களுக்கிடையில் தாக்குதல்: எம்மை கொன்றுவிடுங்கள்! கொழும்பில் கண்ணீருடன் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை


 தற்போது நாம் படும் துன்பத்திற்கு எம்மை கொன்றுவிடுங்கள் என மண்ணெண்ணெய்க்காக வரிசையில் காத்திருக்கும் நபரொருவர் கண்ணீருடன் கதறியுள்ளார்.

எரிபொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ள போதும் எரிபொருட்களை பெற்றுக் கொள்வதில் மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொழும்பு - கொட்டாஞ்சேனையிலுள்ள எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய்க்காக அதிகாலை முதல் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் கண்ணீருடன் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


இதன்போது நபரொருவர் கருத்து தெரிவிக்கையில், நாம் துன்பப்படும் நிலையை வார்த்தைகளில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாம் அதிகாலை முதல் வரிசைகளில் நிற்கிறோம். எம்மை கொன்றுவிடுங்கள்.

நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைவரும் திருடர்கள், நீங்கள் இருக்க வேண்டாம் சென்றுவிடுங்கள். நான் அரசாங்கத்திற்கு ஒன்றை சொல்கிறேன் இதற்கு முடிவொன்றை எடுங்கள்.

இந்த வரிசைகளில் இரத்தம் சொட்ட சொட்ட தமக்குள் தாக்குதல் மேற்கொள்கின்றனர் மக்கள் என குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments