Advertisement

Responsive Advertisement

காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு பிரதமரின் விசேட செய்தி


 பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போராட்டம் நடத்தும் மக்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

“ஆம் அங்கு மக்கள் போராட்டம் நடக்கிறது. தீர்வுகளைக் காண அவர்கள் விவாதங்களுக்கு வர வேண்டும்” என்று பிரதமர் இன்று ஒரு நேர்காணலின் போது கூறியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபடுவோர் பேச்சுவார்த்தையில் ஈடுபடாத பட்சத்தில், தீர்வு கிடைக்காமலே போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்

“இந்த குழுக்களுக்கு நான் பரிந்துரைப்பது அரசாங்கத்துடன் விவாதிக்க வேண்டும். அவர்கள் நம்பக்கூடிய அரசாங்கத்தில் உள்ள சில பிரிவுகளுடன் பேசலாம். இல்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தை தொடரலாம்” என்றார்.

கடந்த வாரம், பிரதமர் மகிந்த ராஜபக்ச, காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த போதிலும் அதனை போராட்டக்காரர்கள் முற்றிலுமாக மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments