Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

துறைநீலாவணைச் சேர்ந்த ஊடகவியலாளர் பாக்கியராசா மோகனதாஷ் அவர்கள் காலமானார்

 


ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி!


துறைநீலாவணை மண் ஈன்ற துணிச்சல் மிகுந்த நேர்மையான ஒரு ஊடகவியலாளன் ஆசிரியர்

தம்பி பாக்கியராசா மோகனதாஷ் அவர்கள் இன்று (23/04/2022) இறையடி சேர்ந்தார்!

இளம் ஊடகவியலாளரான இவர் குறுகிய காலத்தினுள் வீரகேசரியின் களுவாஞ்சிகுடி நிருபராகவும்,தினகரன் பத்திரிகையின் மண்டூர் குறுப், தமிழன் பத்திரிகையின் வீரமுனை நிருபராக தனது ஊடகப் பயணத்தினை ஆரம்பித்த இவர் இலங்கையில் வெளிவருகின்ற பிரபல நாளிதழ்களில் பல வருட காலமாக கட்டுரைகள், அரசியல் வாதிகளின் பேட்டிகள்,கலைஞர்களின் படைப்புக்கள் என பல்வேறு விடயங்களை வெளிக்கொண்டு வந்த பல்துறைக் கலைஞரான இவருக்கு பல வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர் விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.அன்னாரின் இறுதிக்கிரியை நாளை ஞாயிற்றுக்கிழமை துறைநீலாவணை பொது மயானத்தில் நடைபெறும்.

கண்ணீர் காணிக்கை..!

Post a Comment

0 Comments