Advertisement

Responsive Advertisement

யாழில் போராட்டத்தை குழப்பமுனைந்த ஆளும் தரப்பு ஆதரவாளர்! விரட்டி விரட்டி தாக்கிய பொது மக்கள்

 


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐக்கிய பெண்கள் சக்தியினால் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் குழப்பம் விளைவித்த ஆளும் தரப்பு ஆதரவாளர் மீது இளைஞர் ஒருவர் செருப்பினால் தாக்கியுள்ளார்.

இது தொடர்பான காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.


முதலாம் இணைப்பு

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

குறிப்பாக தென்னிலங்கையில் பெருமளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வடக்கிலும் ராஜபக்க அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் "பருத்தித்துறை தொடக்கம் தெய்வேந்திரமுனை நோக்கிய பேரணி" என்ற தொனிப்பொருளில் ஐக்கிய பெண்கள் சக்தியினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக இன்று காலை கச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய இந்த பேரணி செல்கின்றது. அதன் பின்னர் அநுராதபுரம் ஊடாக கொழும்பு நோக்கி கட்டம் கட்டமாக ஏழு நாட்களுக்கு கொழும்பைச் சென்றடையும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. 

குறிப்பாக பொருளாதார நெருக்கடியினால் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் தீர்வு வழங்க வேண்டும் என கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

கட்சி பேதமின்றி இந் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியில் ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிரணிகா பிரேமசந்திர மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப்பொதுச் செயலாளர் உமாசந்திர பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments