கோட்டாபய - மஹிந்த தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் கடந்த காலங்களில் தமிழ் மக்களை கொன்று குவித்தமைக்கான பிரதி பலன்களையே தற்போது அனுபவித்து வருவதாக தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறையில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சரியான தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கத் தவறும் பட்சத்தில், போர்க் காலங்களைப் போன்று ஆட்சியாளர்கள் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதற்காகவே கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ரெலோ, கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டும் என குறிப்பிட்டார் எனவும் விமர்சித்துள்ளார்.
0 Comments