நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் அமைந்துள்ள அரச தலைவர் இல்லத்தை நேற்று இரவு மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் பெரும் கலவரமாக மாறியதில் தென்னிலங்கையில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது
பற்றியெரிந்த தென்னிலங்கை- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு
செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 54 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அந்த கலவரத்தின் போது உதவி காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட 5 காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறை பேருந்து, ஜீப், முச்சக்கரவண்டி, 2 டிராஃபிக் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இராணுவ பேருந்து ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
0 comments: