Home » » கல்முனைக்குடியில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்தியர்கள் , தாதியர் , ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்

கல்முனைக்குடியில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்தியர்கள் , தாதியர் , ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்

 



( றம்ஸீன் முஹம்மட்)

நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களால் இன்று  ( 6 ) பகல் உணவு நேர தொழிற்சங்க போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்த்து.
. வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வைத்தியர்கள் தாதிமார்கள்,அபிவிருத்தி

உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள் என பலரும் கலந்து கொண்டு சுகாதார வசதிகளை இல்லாதொழிக்க வேண்டாம்,நோய்யுற்றவர்களை காப்பாத்துங்கள்,இலவச சுகாதாதத்த்தை இல்லாதொழிக்க வேண்டாம்,நிதி நெருக்கடியால் உயிர்களை கொல்லாதே!சுகாதாரத்திற்கான பண ஒதுக்கீட்டில் கை வைக்காதே!களவெடுத்த பணத்தை திரும்பி கொடு,அத்தியாவசிய மருந்துகளை தடுக்காதே! GO HOME GOTA, வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு, ஆட்சி செய்து கிழித்தது போதும், குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக, பெற்றோல் இல்லை டீசல் இல்லை போன்ற கோசங்களையிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |