Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஐ.நாவின் கழுகுப் பார்வைக்குள் இலங்கை - அறிக்கையும் வெளியீடு

 


இலங்கையில் நிலவும் அரசியல் குழப்ப நிலைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அறிவித்துள்ளது.

இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெறும் அமைதியான போராட்டங்கள் மூலம் மக்கள் தங்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நிலையில், அந்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அறிவித்துள்ளது.

போராட்டங்களின் போது அமைதியை நிலைநாட்ட ஜனநாயக ரீதியாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டவையாக அமைய வேண்டும் என்றும் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இந்த நெருக்கடி நிலைமையை தணிப்பதற்கான அரசாங்கத்தின் இயலுமை இராணுவமயப்படுத்தப்பட்ட நகர்வுகளில் தாக்கம் செலுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் அரசாங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் குடிசார் அமைப்புகள் என்பன இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி பொருளாதார நெருக்கடிக்கு வினைத்திறனான தீர்வினை எட்ட முயற்சிக்க வேண்டும் என மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது

Post a Comment

0 Comments