பலத்த இராணுவ பாதுகாப்புடன் கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள கொள்கலன் தொடர்பான தகவல்களை இலங்கை சுங்க பேச்சாளர், சுங்கப் பிரதி பணிப்பாளர் சுதத் டி சில்வா வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜய கொள்கலன் முனையத்தில் பலத்த இராணுவ பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள கொள்கலனில் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் சபையின் அனுமதியுடன் அகற்றப்படும் கதிரியக்க பொருட்கள் உள்ளன.
இந்த கதிரியக்க பொருட்கள் மீள் ஏற்றுமதி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அத்தகைய நடவடிக்கையின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அல்லது அவ்வாறான விசேட பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வது அந்தச் செயற்பாட்டின் ஒரு அங்கம்.
இதன் காரணமாக, காணொளியில் பகிரப்படும் போலியான தகவல்களால் தவறாக வழிநடத்தப்படுவதைத் தவிர்க்குமாறு கோரியுள்ளார்.
0 Comments