தமிழ் மக்களை அழிப்பதற்காக, இனப்படுகொலைகளை செய்வதற்காக அந்நிய நாடுகளிடம் கடனை வாங்கி போரை முன்னெடுத்ததால் இலங்கை இன்று கடன்பொறிக்குள் சிக்கியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண இணைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“இந்த நாட்டில் காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளே இன்று தெற்கில் ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும் நிலையினை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை இதுவரை காலமும் சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்தாது, அவர்களுக்கு பொய்களை கூறி இதுவரை காலமும் அந்த மக்களை ஏமாற்றினர். ஆனால், இன்று தான் சிங்கள மக்கள் உண்மையினை அறிந்திருக்கின்றார்கள்.
இந்த நாட்டில் தமிழ் மக்கள் தங்களது இருப்புக்காகவும், சுயநிர்ணயத்திற்காகவும் தங்களது உரிமைக்காகவும் தான் போராடினார்கள் என்ற உண்மை சிங்கள மக்களினால் உணரப்பட்டு இன்று ஆட்சியாளர்கள் துரத்தியடிக்கப்படும் நிலை காணப்படுகின்றது” என்றார்.
0 Comments