போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த சம்பவங்களின் காணொளி காட்சிகளை ஆய்வு செய்த பிறகே மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுபெற்றுள்ளதுடன், நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கொழும்பில் பல இடங்களில போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையிலேயே போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments