Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையின் புலனாய்வுத்துறையை திணறடித்த மக்கள்! முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு தீவிரம்

 


இலங்கையில் தற்போது இயங்கு நிலையில் உள்ள புலனாய்வுத்துறையை மக்கள் வீதிக்கு இறங்கி திணற வைத்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும்,முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கெதிரான தீவிரமடைந்துள்ள மக்கள் போராட்டம் தொடர்பில் எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்ற பின்னணியில் போராட்டத்தினை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார்,இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களால் முக்கியஸ்தர்களுக்கும், சொத்துக்கும் சேதங்கள் ஏற்படும் என்ற அச்ச நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்குச் சரியான தீர்வு கிடைக்காமையால் கொதிப்படைந்த மக்கள் அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்கியுள்ளதாகவும்,முஸ்லிம்களுக்கு செய்த பாவமே தற்போது அரசாங்கம் அனுபவிக்கும் நெருக்கடிக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

Post a Comment

0 Comments