Advertisement

Responsive Advertisement

இலங்கைக்கு ஏற்படவுள்ள மோசமான நிலை தொடர்பில் அச்சம் தரும் தகவல்

 


நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை குறித்து நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இன்னும் அறியவில்லை என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தின் பின்னர் நாடு இருளில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நமது நாட்டு மக்களுக்கு நிலைமையின் தீவிரம் தெரியுமா என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த வாரம் IMF உடன் பேச்சுக்களை தொடங்கவில்லை என்றால், நிதி ஆலோசகரை நியமித்து நமது கடனை மறுசீரமைக்க முடியாது. ஜூலை மாதம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும். அதை நம் கையிருப்பில் இருந்து செலுத்த வேண்டும். அதைச் செலுத்தினால், நமது வருமானம் அனைத்தையும் கூட்டி, இந்த பில்லியன் டொலர்களை அடுத்த இரண்டு மாதங்களில் இறக்குமதி இல்லாமல் சேமிக்க வேண்டும். அப்போது இந்த நாட்டில் மருந்து, மின்சாரம், எண்ணெய், எரிவாயு எதுவும் இருக்காது.

இந்தியாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி மே இறுதி வரை தொடரும். பிறகு எப்படி எரிபொருள் கிடைக்கும்? நிலைமை மிகவும் தீவிரமானது. ஐஎம்எப் உடன் பேச்சுவார்த்தை நடத்த நிதியமைச்சர் இருக்க வேண்டும்.அரசாங்கம் இருக்க வேண்டும். விரைந்து செயல்படாவிட்டால் ஜூன் மாதத்திற்கு பிறகு நாடு முழுவதும் இருளில் மூழ்கிவிடும்.

நமது நாட்டின் தற்போதைய நிலவரப்படி, ஒரு பில்லியன் இல்லை, 100 மில்லியன் கூட கொடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்

Post a Comment

0 Comments