நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பதாகை நேற்று இரவு முதல் மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அந்த பதாகையில் “புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள சாணக்கியன் இராசமாணிகத்திற்கு எமது நல்வாழ்த்துக்கள்” என எழுதப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த பதாகைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணி உரிமை கோரியுள்ளது.
மேலும், தற்போது நாட்டில் அடுத்த நிதியமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்த பதாகையானது அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.
0 comments: