இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள வறிய மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கு உலக வங்கி செயற்படுவதாக தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைத்து இந்நாட்டு மக்களின் நலனுக்காக நடவடிக்கை எடுக்கப்படும் என உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியை சமாளிக்க நிலையான மற்றும் மக்ரோ வளர்ச்சி தேவை என்றும் சிறப்பு நடவடிக்கைகள் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
0 comments: