இம்முறை தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வீட்டில் புத்தாண்டு சம்பிரதாயங்கள் மேற்கொண்ட முறை தொடர்பில் எவ்வித நேரடி ஒளிபரப்புகளும் வெளியாகவில்லை.
இதற்கு முன்னர் ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வு பிரமாண்டமான முறையில் இடம்பெறுவது வழமையாகும்.
விசேடமாக பிரதமர் புத்தாண்டு சம்பிரதாயங்களை நிறைவேற்றும் காட்சி நேரலையாக ஒளிபரப்புவதற்கு தொலைகாட்சி சேவைகள் பல நடவடிக்கை மேற்கொள்ளும்.
இம்முறை தேசிய தொலைகாட்சியினால் கால்டன் வீட்டில் ( பிரதமர் வீடு) புத்தாண்டு சம்பிரதாயங்கள் ஏனைய வருடங்கள் போன்றே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக மக்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்பு மற்றும் அதிருப்தி காரணமாக ஒளிரப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
0 comments: