Home » » ரஸ்ய படைகளை பின்தள்ளி 30 நகரங்களை மீளக்கைப்பற்றிய உக்ரைன் படைகள்! வீதிகளில் உடலங்கள்

ரஸ்ய படைகளை பின்தள்ளி 30 நகரங்களை மீளக்கைப்பற்றிய உக்ரைன் படைகள்! வீதிகளில் உடலங்கள்

 உக்ரைன் தலைநகர் கியேவைச் சுற்றி


மேலும் இராணுவ முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக உக்ரைன் கூறுகிறது

உக்ரைனிய துருப்புக்கள் 30 நகரங்கள் மற்றும் கியேவ் பிராந்தியத்தின் குடியேற்றங்களை ரஸ்ய படைகளிடமிருந்து மீட்டெடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் இன்று தெரிவித்துள்ளார்

உக்ரைனிய படைகள் தலைநகருக்கு அருகில் உள்ள பல பகுதிகளை மீட்டெடுத்திருந்தாலும், நாட்டின் பிற பகுதிகளில் இன்னும் தீவிரமான சண்டை நடப்பதாக அவர் உள்ளூர் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்

இதன்படி தெற்கிலும், மரியுபோலுக்காகவும், உக்ரைனின் கிழக்கிலும் இன்னும் கடுமையான போர் இடம்பெறுவதாக அரெஸ்டோவிச் கூறியுள்ளார் கீவ் அருகே உள்ள நகரத்தில் சாலையின் குறுக்கே பல மனித உடலங்;கள் சிதறிக் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ரஸ்ய துருப்புக்கள் அங்கிருந்து பின்வாங்கிய பின்னர் புச்சா நகருக்குள் நுழைந்த முதல் உக்ரைனிய துருப்புக்களுடன் சென்ற செய்தியாளர்கள், ஒரு சாலையில் குறைந்தது 20 உடலங்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டனர்.

இறந்த சிலரின் கைகள் கட்டப்பட்டு, தலையில் குண்டு காயங்களுடன் காணப்பட்டதாகவும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |