கூரிய ஆயதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 22 வயது பெண்ணின் சடலம் மெதிரிகிரிய - அம்பகஸ்வெவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள 22 வயதுடைய பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் தனது காதலனுடன் இந்த வீட்டில் சிறிது காலம் வசித்து வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று அம்பகஸ்வெவ பிரதேசத்தில் தலை மறைவாகியிருந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments