Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

 


(  அஸ்ஹர் இப்றாஹிம் )

அம்பாறை மாவட்டத்தில் சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்கும் நோக்கில் சுயதொழில் புரிவதற்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது..
இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் மகாஓயா பிரதேச செயலக கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுயதொழில் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோஸ்தர்கள் , சமூர்த்தி பயணாளிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments