( றம்ஸீன் முஹம்மட்)
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் 2018 / 2020 ஆம் வருட ஆசிரிய பயிலுனர்களை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இணைப்பதற்குரிய அனுமதி கல்வி அமைச்சின் ஆசிரிய கல்விப்பிரிவின் பிரதம ஆணையாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனடிப்படையில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள 08 வலயங்களைச் சேர்ந்த 123 பாடசாலைகளுக்கு 2022.03.07 ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் இணைக்கப்பட்டுள்ளனர்
ஆரம்பகல்வி, விஞ்ஞானம், கணிதம், விஷேட கல்வி, இஸ்லாம் ஆகிய 05 பாடநெறிகளை சேர்ந்த 349 ஆசிரிய பயிலுனர்களும் இவ்வருடம் நிறைவுறும் வரை தங்களது கற்பித்தல் பயிற்சியை மேற்படி பாடசாலைகளில் பெறவுள்ளதாகவும் கல்லூரியின் பீடாதிபதி தெரிவித்தார்.
இது தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு தொடருறு கல்விக்கான உப பீடாதிபதி எம்.ஐ. ஐஃபர் தலைமையில் திங்கட் கிழமை கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாகக் கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார்.
. இந்நிகழ்வில் உப பீடாதிபதிகளும், விரிவுரை இணைப்பாளர்களும், விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர். இதில் ஆசிரிய பயிலுனர்களை கட்டுறு பயில்வு பாடசாலையில் இணைப்பதற்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டதுடன், இந்நிகழ்வை தொடருறு கல்விக்கான இணைப்பாளர் எம்.டி. முஸம்மில் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.
0 comments: