Home » » உலக உப்பு வாரத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் விழிப்புணர்வு நிகழ்வும் பொருட்காட்சியும்

உலக உப்பு வாரத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் விழிப்புணர்வு நிகழ்வும் பொருட்காட்சியும்

 


( அஸ்ஹர் இப்றாஹிம்)

உலக உப்பு வாரத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் விழிப்புணர்வு நிகழ்வும் பொருட்காட்சியும்  இன்று காலை  ( 15 ) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஸனூஸ் காரியப்பர் தலைமையில் தாதி பரிபாலன உத்தியோஸ்தர் பீ.எம்.எம்.நஸுர்த்தீனின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.

” உப்பு பழக்கத்தின் உறுதியை குலைப்போம் ” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி  டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் பிரதம அதிதியாகவும் , பிரதி கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.பீ.ஏ.வாஜித் , கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் தொற்றா நோய் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ஐ.எம்.எஸ்.இர்ஸாத் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்தியர் டாக்டர் அஜந்தா விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

கண்காட்சினை காண்பதற்கு பாடசாலை மாணவர்கள் , நோயாளிகள் , நலன் விரும்பிகள் , வைத்தியசாலை உத்தியோஸ்தர்கள் , ஊழியர்கள் , வைத்தியசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் துண்டுப் பிரசுரங்களும் , குறைவான உப்பிட்ட இலைக்கஞ்சியும்  வழங்கப்பட்டன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |