Advertisement

Responsive Advertisement

மட்டு அம்பாரை மாவட்டத்தினைச் சேர்ந்த யுவதிகளின் நலன் கருதி இலவச உதவித் தாதியர் பயிற்சிநெறி.


 மட்டு அம்பாரை மாவட்டத்தினைச் சேர்ந்த யுவதிகளின் நலன் கருதி இலவச உதவித் தாதியர் பயிற்சிநெறி.

லண்டனில் உள்ள அம்பாரை மாவட்ட விபுலானந்தர் புனர்வாழ்வுக்கழகத்தினதும் ஏடு(ADVRO&AEDU)அமைப்பினதும் அனுசரணையுடன் மட்டு அம்பாரை மாவட்டத்தினைச் சேர்ந்த யுவதிகளின் நலன் கருதி ஒரு வருட காலம் கொண்ட இலவச உதவித் தாதியர் பயிற்சி நெறியினை இலங்கை ADVRO அமைப்பு குருக்கள்மடத்தில் அமைந்துள்ள ADVRO விபுலானந்தர் முதியோர் நலன்புரி அமைப்பின் கேட்போர் கூடத்தில் எதிர் வரும் யூன் மாத முதல் வாரத்தில் ஆரம்பிக்க இருப்பதனால் க.பொ.த(சா/த) பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து யுவதிகளும் இப் பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்க முடியும். இப்
பயிற்சி நெறியில் கலந்துகொள்ள இருப்பவர்களது ஆங்கிலப் புலமையினை விருத்தி செய்வதற்காக இலவச ஆங்கில வகுப்புக்கள் ஏப்ரல் 1 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்க இருப்பதுடன் பயிற்சி நெறியில் கலந்துகொள்பவர்களுக்கான போக்குவரத்து வசதி அல்லது போக்குவரத்துக் கொடுப்பனவுக்கான ஒழுங்குகள் செய்துகொடுக்கப்பட இருப்பதாகவும் இலங்கை ADVRO அமைப்பின் தலைவர் ஓய்வு நிலை அதிபர் கா.சந்திரலிங்கம் அவர்கள் தெரிவித்தார்கள்.
இப் பயிற்சி நெறி தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு 0776114482 இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி.தா

The Manager,ADVRO Vipulanandar Elders Welfare Organisation, Main Street, Kurukkal madam.

Post a Comment

0 Comments