( அஸ்ஹர் இப்றாஹிம்)
காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு கடற்கரையோரப் பிரதேசம் கடலரிப்பினால் பாரிய சேதத்திற்குள்ளாகி வருகின்றது.
அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் மற்றும் பாரிய அலையின் வேகத்தினால் கடலோரம் தினசரி பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருவதுடன் , கரைவலை மீனவர்களின் தோணிகளையும் வள்ளங்களையும் பாதுகாப்பாக பேணுவதற்கு வேறு இடமில்லாமல் சுனாமி அனர்த்த்த்தினால் சேதமடைந்த மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்திற்கு பின்புறமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
.2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது கூட பாதிக்கப்படாத மாளிகைக்காடு கடலோரப்பிரதேசம் தற்போதுள்ள நிலையில் பாதிக்கப்பட்டு வருவது பிரதேச மக்களுக்கு பெரும் கவலையளிக்கின்றது.தொடர்ச்சியாக இவ்வாறு கடலரிப்பு தொடருமேயானால் மாளிகைக்காட்டில் கடற்கரை பிரதேசமொன்று இல்லாமல் போவதுடன் , கரைவலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மீனவர்களும் தொழிலில்லாமல் நிர்கதி நிலைக்கு உள்ளாக வேண்டிவரும் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments