Advertisement

Responsive Advertisement

மாணவர்களுக்கான கொவிட் – 19 பாடசாலை விடுமுறை கால மீட்டல் நூல்களின் வெளியீட்டு விழா


 ( அஸ்ஹர் இப்றாஹிம்)


சம்மாந்துறை வலய கல்வி அலுவலகத்தினால் பொதுப்பரிட்சைகளுக்கு முகம் கொடுக்கும் மாணவர்களுக்கான கொவிட் – 19 பாடசாலை விடுமுறை கால மீட்டல் நூல்களின் வெளியீட்டு விழா அண்மையில் சம்மாந்துறை தாறுஸ் ஸலாம் மகா லித்தியாலயத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சௌதுல் நஜீம் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜீ.திசாநாயக பிரதம அதிதியாகவும் , கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது 2022 ஆம் ஆண்டு 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தமிழ் , கணிதம் , சுற்றாடல் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய கொவிற் 19 விடுமுறைகால செயல்நூல் , க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கான விஞ்ஞானத்தை வென்றிட இலகு வழிகாட்டி , க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித புதிர் ஒளி ஆகிய நூல்களும் , பலோ மீ ஆங்கில் இறுவட்டும் அதிதிகளினால் வெளியிட்டு வைக்கப்பட்டன.

Post a Comment

0 Comments