(அஸ்ஹர் இப்றாஹிம்)
அரலகங்வில பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் 203 பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பொரலந்த பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் 603 பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள்களின் தேர்ச்சி அணிவகுப்பு மரியாதை பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தலைமையில் பொரலந்த பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்றது.
அரங்கல பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் சிறந்த பயிலுனர் விருதினை பொலிஸ் கான்ஸ்டபிள் விமுக்தி சஹான் சூரியாராச்சியும், பொரலந்த பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இசுரு சந்தருவன் விக்கிரமசிங்க சிறந்த பயிலுனர் விருதினையும் பெற்றுக்கொண்டனர்.
0 Comments