Home » » பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடி பரீட்சை நிலையத்தில் நடைபெற்ற பரீட்சையின்போது வினாத்தாள் நேர காலதாமதமாக வழங்கப்பட்டது

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடி பரீட்சை நிலையத்தில் நடைபெற்ற பரீட்சையின்போது வினாத்தாள் நேர காலதாமதமாக வழங்கப்பட்டது



( அக்தார் அஹமட் )
 
கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சை  திங்கட்கிழமை (07) ஆரம்பிக்கப்பட்டது.
இருந்தும்  மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடி  பரீட்சை நிலையத்தில் நடைபெற்ற பரீட்சையின்போது வினாத்தாள் நேர காலதாமதமாக வழங்கப்பட்டதாக மாணவர்களும், பெற்றோரும் விசனம். தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் நடைபெற்ற இணைந்த கணிதபாட பரீட்சையின்போது, வழங்கப்பட்ட வினாத்தாள்களில் முதலாம் பகுதியும், இரண்டாம் பகுதியும், காலை 8.30 மணிக்கே மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் குறித்ததாள்களில் இரண்டாம் பகுதி வினாத்தாள் காலை 8.30 மணிக்கு வழங்கப்பட்டிருந்ததோடு, மற்றய முதலாம் பகுதி வினாத்தாள் இன்னும் வழங்கப்படவிலலையே சேர் என மாணர்கள், பரீட்சை மேற்பார்வையாளரிடம் கோரியதற்கிணங்க, அதன் பின்னர் காலை 10 மணியளவில் மற்றைய வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், எனினும் பரீட்சை வினாத்தாள்கள் 11.40 மணிக்கு சரியாக முடிவுறுத்தப்பட்டதாகவும், மாணவர்களும், பெற்றோரும் விசனம் தெரிவிக்கின்றர்.
இவ்விடையம் குறித்து பெற்றோர் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குச் சென்று தமது பிள்ளைகளுக்கு நடந்த அநீதி தொடர்பில் எழுத்துமூலம் பரீட்ரைச ஆணையார் நாயகத்திற்கு முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவ்விடையம் அறிந்த பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியன், பட்டிருப்பு வலயக்கல்வி அதிகாரிகளுடனும், பெற்றோர்களுடனும், கலந்துரையாடினார்.

இது தொடர்பில் இரா.சாணக்கியன், நேற்று நடைபெற்ற பரீட்சையின்போது மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட தவறு தொடர்பாக குறித்த பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக வலயக்கல்விப் பணிப்பாளரிடம் தெரிவித்தார்.

எனினும், மாணவர்களுக்கு நடந்த அநீதி தொடர்பில், நான் கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து அவரது கவனத்திற்குக் கொண்டு செல்வேன் என கருத்துத் தெரிவித்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |