Home » » மஹரகம, பமுனுவ மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மஹரகம, பமுனுவ மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


 ( அஹ்ஸன் அஹமட்)


மஹரகம, பமுனுவ மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பகஸ்வெவ, ஹிரியால, தரணகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கயிற்றில் இருந்து பெண் மீட்கப்பட்டு ஆணொருவரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக   பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.

அதன்படி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்ததுடன் நுகேகொட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆய்வக அதிகாரிகளை அழைத்து விசேட விசாரணையை ஆரம்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |