மாளிகைக்காடு நிருபர்
கலாசார அலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பிரதேச இலக்கிய விழாவானது பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு வி. விக்னேஸ்வரன் ஒருங்கிணைப்பில் சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த பணி மன்றத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் "காரையொளி" மலர் வெளியீடும், இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ், நினைவுச்சின்னம் ,பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான திரு ரி.எம் றிம்ஸான், கு.ஜெயராஜீ அவர்களும் சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எம்.எம் அச்சி முகமட் மற்றும் கலாசார அதிகார சபையின் செயலாளர் எஸ். நாகராஜா, காளி கலா மன்றத் தலைவர் எஸ். ராமநாதன் மற்றும் பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.புண்ணியநாதன் கலாசார உத்தியோகத்தர்களான எம்.சதாகரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் லோ.சிவலோஜினி, எஸ்.எம். ஜெலிலா, பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம். மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் பல கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
0 comments: