Advertisement

Responsive Advertisement

அம்பாறை ரஜவெவ வீதி 3.5 கோடி ரூபா செலவில் கொங்கிறீட் வீதியாக அபிவிருத்தி செய்யும் திட்டம்



( அஸ்ஹர் இப்றாஹிம்)

அம்பாறை ரஜவெவ வீதி 3.5 கோடி ரூபா செலவில் கொங்கிறீட் வீதியாக அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1.5 கிலோ மீற்றர் நீளமான இந்த வீதி பொதுமக்களின் பாவனைக்கு பொருத்தமில்லாதவகையில் காணப்பட்டது.
இப்பிரதேச மக்கள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வனவலங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான விமலவீர திஸாநாயகாவிடம்  விடுத்த வேண்டுகோளுக்கமைய இவ்வீதி கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்படுகின்றது.


இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வனவலங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான விமலவீர திஸாநாயகா , அம்பாறை நகராதிபதி கெலும் குமார மற்றும் பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments