( அஸ்ஹர் இப்றாஹிம் )
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக 2022 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முல்லைத்தீவுபுதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு.எஸ். ஜெயக்காந் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலககேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
இவ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதேச வாரியாக மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுவிடயங்கள் பற்றியும் திணைக்களங்கள் சம்பந்தமான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் விரிவாகஆராயப்பட்டன
.குறித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.விணோ நாகரதலிங்கம், பிரதேச சபைதவிசாளர்கள், உறுப்பினர்கள்,திணைக்கள தலைவர்கள்,அரச பதவிநிலைஉத்தியோகத்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிகள் என பலரும்குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.
0 Comments