Home » » மண்டூரின் மற்றொரு ஆளுமை சைவப்புலவர் சித்தாந்தபண்டிதர் சித்தாந்தரத்தினம் திருமதி சிவானந்தஜோதி ஞானசூரியம் அம்மணியவர்கள் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் உப .தலைவராகத்தெரிவு

மண்டூரின் மற்றொரு ஆளுமை சைவப்புலவர் சித்தாந்தபண்டிதர் சித்தாந்தரத்தினம் திருமதி சிவானந்தஜோதி ஞானசூரியம் அம்மணியவர்கள் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் உப .தலைவராகத்தெரிவு

 


மண்டூரின் மற்றொரு ஆளுமை சைவப்புலவர் சித்தாந்தபண்டிதர்  சித்தாந்தரத்தினம்  திருமதி சிவானந்தஜோதி ஞானசூரியம்  அம்மணியவர்கள்  அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் உப .தலைவராகத்தெரிவு செய்யப்பட்டமையை யிட்டு மண்டூர் மக்கள் சார்பில் மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம். இவர் மட்டக்களப்பின் முதல் பெண் சைவப்புலவர். இயல்பாகவே சமயநெறிமுறைகளையும் சித்தாந்த நடைமுறைகளையும் பின்பற்றிவருகின்ற சிவபூசகர்.2011ல் திருவாவடுதுறை ஆதீனத்தின் குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியரிடம் சிவதீட்சை பெற்றவர்.  யாழ். பல்கலைக்கழகத்தில் சைவசித்தாந்தத்தில்  எம்.ஏ பட்டம்பெற்றவர். இவர் சிறப்பான சமயப்பிரசாரகர்.இந்தியா மலேசியா  யாழ்ப்பாணம்  கொழும்பு மலையகம் மற்றும் கிழக்குமாகாணம் ஆகியவற்றில் உள்ள பலஆலயங்களில் சமயச்சொற்பொழிவுகள் ஆற்றியவர். அகிலஉலக சைவ மகாநாடுகளில் ஆய்வுக்கட்டுரைகள் பலவற்றைச் சமர்ப்பித்து அறிஞர்களின் பாராட்டைப்பெற்றவர். அகிலஇலங்கை இந்துமாமன்றம் கொழும்புத்தமிழ்ச்சங்கம்  உலகச்சைவப்பேரவை  மட்டக்களப்புத்தமிழ்ச்சங்கம் ஆகியவற்றில் ஆயுட்கால உறுப்பினர்.இதுபோன்ற பல இந்துசமய இயக்கங்களின் தலைவராகவும். போசகராகவும் இயங்கிக்கொண்டிருக்கும் தீவிர சமயப்போராளி. இந்துஔி இதழில் பல கட்டுரைகளைத்தொடர்ச்சியாக எழுதி வருபவர். இலங்கை கல்வி வெளியீட்டுத்திணைகளத்தின் 8.9ம்தர சைவநூலாக்க்குழுவின் உறுப்பினர். தான் பெற்ற இன்பம் பெறுக வையகமெல்லாம் எனும் கோட்பாட்டை இறுக்கமாகப் பின்பற்றும் சித்தாந்தவாதி. சைவப்புலவர் பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்களைத்தயார்படுத்துவதற்கான பல வகுப்புக்களை நடாத்தி தன்னைப்போன்ற பல சைவப்புலவர்களை உருவாக்கிய புலமையாளர். பல சமயஞானிகளின் ஆசிபெற்றசமய பண்டிதர்.வந்தோர்க்கு விருந்தோம்பும் பண்பும். பெரியோரைக்கனம்பண்ணும் தன்மையும் கொண்ட சித்தாந்த பண்டிதரின் சமயச்சேவை மேலும்விரிவடைந்து சிறந்து விளங்க சிவனி்ன் அருட்கடாட்சமும் நீடித்த ஆயுளும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன். உறவு முறையில் எனது சகோதரி  அறிந்த தெரிந்த தகவல்களைப்பதிவிட்டுள்ளேன்.     நன்றி வாசகர்களுக்கு.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |