Advertisement

Responsive Advertisement

ஏறாவுரில் கிறிக்கட் சீருடை அறிமுக விழா



( றம்ஸீன் முஹம்மட்)

ஏறாவூர் லக்கிஸ்டார் விளையாட்டு கழகத்தின் உத்தியோக பூர்வமான சீருடை அறிமுக விழா அண்மையில் டாக்டர் அஹமட் பரீட்  விளையாட்டு மைதானத்தில் லக்கி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் நிர்வாக தலைவர்  ஏ.ஸி.ஏ. சலாம் தலைமையில் இடம் பெற்றது.
லக்கி ஸ்டார் விளையாட்டு கழகத்துக்கான உத்தியோக பூர்வ சீருடைக்கு ஏறாவூர் நகர சபை  உறுப்பினர்  ஏ.எஸ்.எம்._றியாழ் தனது சொந்த நிதியில் அனுசரணை வழங்கினார்.
 சீருடை அறிமுக  விழாவை முன்னிட்டு ஏறாவூர் யங்  ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்திற்கும் லக்கிஸ்டார் விளையாட்டுக்கழகத்துக்குமான சினேக பூர்வமான கடின பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்றும் இடம்பெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான செய்யத் அலிஸாஹிர் மௌலானா அவர்களும்,
கௌரவ அதிதிகளாக ஏறாவூர் நகர சபையின் தவிசாளர்  எம்.எஸ்._நழீம்  நகரசபை உறுப்பினர்  ஏ.எஸ்.எம._றியாழ் அவர்களும், சிறப்பு அதிதிகளாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  எம்.ஆர். ஹர்ஷடி சில்வா, சியப்பத்தா எல்.எல்.ஸி  நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எம்.எச்.எம்.பிரிம்ஷாத் ஆகியோரும்   அதிதிகளாக ஏறாவூர் வர்த்தக சங்கத்தின் தலைவர்  ஏ.ஆர்.எம்.ஆஷிக், செயலாளர்  ஏ.எம்.அஸ்மி  , மற்றும் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்தோடு கலந்து கொண்ட பிரதம அதிதி, கௌரவ அதிதிகளுக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது

தொடர்புபட்ட செய்தி....


( அக்தார் அஹமட்)


ஏறாவுர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கடின பந்து கிறிக்கட் அணிக்கு சீருடை வழங்கி வைக்கும் நிகழ்வு ஏறாவுரில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அலிசாக்கீர் மௌலானா பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிறிக்கட் கழக சீருடைகளை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் பல முக்கியஸ்தர்களும் , கிறிக்கட் ஆர்வலர்களும் , ஏறாவுர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments