Home » » இலங்கையில் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் அதிகம் பெண்களினாலேயே ஏற்படுத்தப்படுகின்றன. அம்பாறை பெண்கள் அமைப்பின் தலைவி திருமதி .லீலாவதி சோமரெட்ண

இலங்கையில் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் அதிகம் பெண்களினாலேயே ஏற்படுத்தப்படுகின்றன. அம்பாறை பெண்கள் அமைப்பின் தலைவி திருமதி .லீலாவதி சோமரெட்ண



  இலங்கையில் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் அதிகம் பெண்களினாலேயே ஏற்படுத்தப்படுகின்றன.
அம்பாறை பெண்கள் அமைப்பின் தலைவி திருமதி .லீலாவதி சோமரெட்ண

( அஸ்ஹர் இப்றாஹிம்)

இந்த நாட்டில் பெண்களுக்கெதிரான அதிகளவிலான வன்முறைகள் ஆண்களை விட பெண்களாலேயே ஏற்படுகின்றன.
இவ்வாறு மத்திய முகாம் பிரதேசத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வைபவமொன்றில் கலந்து கொண்ட அம்பாறை பெண்கள் அமைப்பின் தலைவி திருமதி .லீலாவதி சோமரெட்ண தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ,
பெண்கள் தனது சொந்த காலில் நின்று பொருளாதார ரீதியில் மேம்படும் போது எந்தவொரு சக்திக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை.
இன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறையினை முற்றாக ஒழிக்காவிட்டாலும் , ஓரளவிற்கேனும் இல்லாதொழிப்பதற்கு அனைவரினதும் பங்களிப்பு அவசியமாகின்றது. வன்முறை என்பது அதிகாரம் அதிகமுள்ளவர்கள் அதிகாரம் குறைந்தவர்கள் மீது பிரயோகிக்கும் ஒருவகை சக்தியாகும்.இது பல்வேறு வகைகளிலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பல்வேறுபட்ட நபர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அதே வேளை சட்டத்திலுள்ள ஓட்டை காரணமாக குற்றசாளிகள் தப்பித்தும் கொள்கின்றார்கள்.
வீட்டின் வன்முறையின் போதும் சரி ஏனைய மூலகங்கள் ஊடாக இடம்பெறும் வன்முறையின் போதும் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவும் சிறுவர்களாகவும் உள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தவரையில் 30 சதவீதமாக பெண்கள் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டு வருவதாக அண்மைக்கால அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதே போன்று அதிகமான வன்முறைகள் இடம்பெறும் இடமாக வீடுதான் அமைந்துள்ளது.இதற்கு பெற்றோர்களும் ஒரு காரணமாக அமைகின்றனர்.
ஒரு பிள்ளை தாயின் கருவில் உருவாகும் போதே வன்முறை ஆரம்பமாகின்றது.முன்பெல்லாம் ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் பிள்ளை பிறந்த பின்னர்தான் அது ஆணா பெண்ணா என்பது தெரியவரும். அந்த செய்தியினை அறிவதற்கு குடும்பத்தினர் பெரும் ஆவலாக இருப்பார்கள். இன்று அந்த நிலமை மாறி கருவுற்ற மறுகணமே அது ஆணா பெண்ணா என்பது தெரிய வந்து விடுகின்றது. இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வன்முறை உருவாவதற்கு வித்திடப்படுகின்றது. கருவுற்றிருப்பது பெண் என்று தெரிந்த்தும் , அதிகமான தந்தைமார் சீதனக் கொடுமை காரணமாக அதனை கருவிலேயே அழிக்க முற்படுகின்றார்கள் . இன்று இலங்கையின் சனத்தொகையில் ஆண்களை விட பெண்களின் தொகை அதிகரித்துக்கொண்டு செல்லும் அதே வேளை கல்வியறிவியலிலும் உயர் தொழில் துறைகளிலும் பெண்களே முன்னேறி வருகின்றனர்.ஆனால் சமூகத்தின் எந்த நிலையிலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். இந்த நிலரம மாற வேண்டும் என்பது பற்றி பிள்ளையின் பெற்றோர் கவலை கொள்வதில்லை.பெண்களுக்கெதிரான வன்முறை இந்த நாட்டில் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.பெண்களின் உரிமை இதிக்கப்பட வேண்டும்.
என்று தெரிவித்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |