ரஷ்ய, உக்ரைன் பிரச்சினை உலக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைய அளவில் ஒரு பெற்றோல் பீப்பாயின் விலை 100 டொலராக அதிகரித்துள்ளது. இது, எதிர்வரும் சில நாட்களில் 150 டொலராக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு நாடுகளினதும் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சியும் 0.9 சதவீதம் குறையும் அபாயம் இருக்கிறது.
அது போல் இயற்கை எரிவாயுக்களின் விலையும் உயரும். சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கருங்கடல் பகுதியிலிருந்து தானியங்கள் வரத்திலும் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உணவு பொருட்களிலும் விலையேற்றம் இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மேலும் உலகின் கோதுமையை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முன்னணியில் உள்ளது ரஷ்யா.
அதே நேரம் உக்ரைன் கோதுமை உற்பத்தியில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதனால் உக்ரைன் மீதான போரால் இந்த பொருட்களுக்கான விலை அதிகரிப்பதற்கான வாயப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
0 Comments