Advertisement

Responsive Advertisement

Beach flower Garden வளாகம் இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.



( அஸ்ஹர் இப்றாஹிம்)

சாய்ந்தமருது ( Organic Green Society ) ஓகானிக் கிறின் அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள மக்களின் பொழுது போக்கு தளமாக , சாய்ந்தமருது தோணா முகத்துவாரம் பிரதேசத்தில் அமையப்பட்டுள்ள  Beach flower Garden வளாகம்  இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

மக்கள் சுத்தமான சுவாசக் காற்றை அனுபவிக்கும் வகையில் இனிய மாலைப் பொழுதினை கழிக்கும் வகையிலும் ஓகானிக் கிறின் அமைப்பின் செயற்பாட்டாளர்களினால் இவ்விடம் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

இவ் அமைப்பின் தலைவர் எச்.எம்.ஸிஹாப் தலைமையில் இன்று மாலை நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை மாநகர மேயர் கௌரவ ஏ.எம்.றகீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு Beach flower Garden  பெயர்ப்பலகையை திரை நீக்கம் செய்ததுடன் , நாடாவினை வெட்டி பொழுது போக்கு வளாகத்தையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோஸ்தர் ஏ.ஸி.எம்.பளீல் , கிராம சேவகர்களுக்கான நிர்வாக உத்தியோஸ்தர் எம்.எஸ்.எம்.நளீர் , பொறியியலாளர் எம்.ஸி.கமால் நிஸாத் , கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி சிரேஸ்ட ஆசிரியர்கள் , யு.எல்..அபுல்ஹஸன் , எம்.எம்.நிஸார் , எம்.ஐ.எம்.அஸ்ஹர் , எம்.எம்.அமீர் உட்பட அமைப்பின் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments