Home »
எமது பகுதிச் செய்திகள்
» ஈஸ்டர் தாக்குதல் – சஹ்ரானின் மனைவியிடம் 6 மணித்தியாலங்கள் CID விசாரணை!
ஈஸ்டர் தாக்குதல் – சஹ்ரானின் மனைவியிடம் 6 மணித்தியாலங்கள் CID விசாரணை!
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 6 மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சஹ்ரான் ஹாஷிமின் மனைவி தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்றைய தினம் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: