Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் ஏப்ரல் 30க்கு பின்னர் வருகின்றது புதிய நடைமுறை!

 


இலங்கையில் பொது இடங்களுக்கு செல்பவர்கள், பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உள்ளாகி இருக்க வேண்டும் என்ற நடைமுறை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியின் பின்னர் நடைமுறைக்கு வரவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்களா? இல்லையா? என்பதை அறிந்துகொள்ள செயலி ஒன்றையோ அல்லது அட்டை ஒன்றையோ அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, இலக்கு வைக்கப்பட்டுள்ள தரப்பினருக்கான தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 6.2 மில்லியன் பேருக்கு இதுவரையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசி தொகை, எதிர்வரும் ஜூலை மாதத்துடன் காலாவதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments