Advertisement

Responsive Advertisement

மாத்தளை ஸாஹிரா தேசிய கல்லூரி வெற்றி 190 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது



( அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கை பாடசாலை கிரிக்கட் சங்கத்தினால் நாடு தளுவிய ரீதியில் நடாத்தப்பட்டு வருகின்ற 15வயதுக்குட்பட்ட50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட  கடின பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியில் மாத்தளை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கும்  மாத்தளை புனித சாந்த தோமஸ் கல்லூரிக்குமிடையில் இடையிலான போட்டியில் மாத்தளை ஸாஹிரா தேசிய கல்லூரி  190 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது
முதலில் துடுப்பெடுத்தாடிய மாத்தளை ஸாஹிரா தேசிய கல்லூரி  50 ஓவர்களில் 378  ஓட்டங்களை பெற்றது .
பதிலுக்கு துடுப்பாடிய மாத்தளை புனித சாந்த தோமஸ் அணியினர் 33.3  ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர். மேலதீக 190 ஓட்டங்களால் மாத்தளை ஸாஹிரா தேசிய கல்லூரி  அணி வெற்றியீட்டிக் கொண்டது
மாத்தளை ஸாஹிரா தேசிய கல்லூரி  சார்பில் முஹம்மட் அர்ஹம்  139  ஓட்டங்களையும்   எம்.எஸ்எம்.அகீல்   57  ஓட்டங்களையும்  உஸ்மான்  65  ஓட்டங்களையும் பெற்றதுடன்   றிஹாம் மற்றும் அஹமட் ஆகியோர் தலா  3 விக்கட்டுக்களையும் அர்ஹம் , துலக்ஸான் , அகீல் , ஐமன் அலி , ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் கைப்பற்றினார்கள்.

Post a Comment

0 Comments