கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 150 தாதியர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொவிட் வேகமாகப் பரவி வருவதால், நாடு முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் கொவிட் நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் கொவிட் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்டிருக்கும் போதே கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
தேசிய மருத்துவமனையில் கொவிட் தொற்றுக்குள்ளான தாதியர்களில் 25 கர்ப்பிணிகளும் உள்ளதாகவும் சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
0 comments: