Home » , » சாய்ந்தமருது பிரதேச வைத்திய சாலையின் மருத்துவ ஆய்வுகூட வசதியை மேம்படுத்தும் PSSP திட்டம்

சாய்ந்தமருது பிரதேச வைத்திய சாலையின் மருத்துவ ஆய்வுகூட வசதியை மேம்படுத்தும் PSSP திட்டம்



( றம்ஸீன் முஹம்மட்)

சாய்ந்தமருது பிரதேச வைத்திய சாலையின் மருத்துவ ஆய்வுகூட வசதியை மேம்படுத்தும் PSSP திட்டத்தின் மற்றுமொரு இயந்திரம் இன்று வழங்கி வைக்கப்பட்டு செயற்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜீ.சுகுணன்  அவர்களின் முயற்சியினாலும்  திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர்  எம்.ஸி.எம்.மாஹிர் அவர்களின் உதவியினாலும்  உள்வாங்கப்பட்ட PSSP திட்டத்தினூடாக ஏறத்தாள 3.5 மில்லியன் பெறுமதியான 5 part haematoly analyser    வைத்திய சாலைக்கு கிடைத்தது மற்றுமொரு சிறப்பு நிகழ்வாகும்..

இந்நிகழ்வில் பதில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர்.ஸனூஸ் காரியப்பர் , வைத்தியர்கள் , தாதிகள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |