Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் பொருளாதார நெருக்கடியும் மக்களின் எதிர்காலமும் எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல்

 


மட்டக்களப்பில் பொருளாதார நெருக்கடியும் மக்களின் எதிர்காலமும் எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் ஒன்று  இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது. 

(பிளேஜ் ரூ றீஸ்ரோர் பவுண்டேஷன்) சமூகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்ற அமைப்பின் தலைவர் அ.சிவயோகநாதன் தலைமையில் சிவில் சமூக அமைப்புக்கள் பல்சமய அமைப்பு என்பன இணைந்து ஒரு மாற்றத்துக்கான கலந்துரையாடலாக இடம்பெற்றது.

உணவு பாதுகாப்பு தொடர்பான தற்போதைய எதிர்காலநிலை உணவுப்பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான யுக்திகள் எவை , எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் பேசப்பட்டன.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் மக்களை எவ்வாறு பாதுகாக்கலாம் எவ்வறான மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது போன்ற பல விடயங்கள் முன்வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுக்கு சிவில் சமூக அமைப்புக்கள் பல்சமய ஒன்றிய தலைவர்கள் அருட்தந்தையர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments