Home » » சுதந்திர தின கால்பந்தாட்ட தொடரில் கிழக்கு மாகாண அணிக்கும் மத்திய மாகாண அணிக்கும் இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

சுதந்திர தின கால்பந்தாட்ட தொடரில் கிழக்கு மாகாண அணிக்கும் மத்திய மாகாண அணிக்கும் இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.




(அஸ்ஹர் இப்றாஹிம்  )

இலங்கையிலுள்ள மாகாணங்களுக்கிடையிலான சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் மைதானத்தில் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண அணியும் மத்திய மாகாண அணிக்கும் இடையிலான போட்டியில் இரு அணிகளும் எதுவித கோல்களையும் போடாத நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைநத்து.

கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண மாகாண மட்ட கால்பந்தாட்டப் போட்டியின் முதலாவது போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் மாகாணங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டி கடந்த செவ்வாய்க் கிழமை ஆரம்பமானது.

புதிதாக புனரமைக்கப்பட்ட மாளிகாபிட்டிய மைதானத்தில்  இடம்பெற்ற. ஆட்டம் ஆரம்பம் முதலே விறுவிறுப்பான திருப்பத்தை ஏற்படுத்தியது, இரு தரப்பிலும் தற்காப்பு ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பாக விளையாடியதன் மூலம் பல கோல்களை அடிப்பதைத் தவிர்த்தனர்.
குறிப்பாக மத்திய மாகாண கோல் காப்பாளர் கிஹான் குருகுலசூரிய இந்த போட்டியில் குறிப்பிடத்தக்க ஆட்ட பாணியை வெளிப்படுத்தினார், ஏனெனில் அவர் சமீபத்தில் முடிவடைந்த சுப்பர் லீக்கில் புளூ ஈகிள்ஸ் அணியின் அனுபவம் வாய்ந்த கோல்கீப்பராக இருந்தார்.

தேசிய உதைபந்தாட்ட அணியில் கிழக்கு அணிக்காக விளையாடிய மொஹமட் ரிப்கான் மற்றும் மொஹமட் முஸ்தாக், தேசிய அணியில் மத்திய மாகாணத்திற்காக விளையாடிய காலிட் அஷ்மிர் ஆகியோர் இணைந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக எம்.எச்.எம். ரூமி பொறுப்பாளராகவும், ரூமி பக்கீர் அலி மத்திய மாகாண அணியின் தலைமை பயிற்சியாளராகவும் கடமையாற்றுகின்றனர்.
மாகாண உதைபந்தாட்டப் போட்டியின் மூலம் கிராமிய மட்டத்தில் பல திறமையான வீரர்களை அடையாளம் காண முடிந்ததாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமப்புறங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு மாகாணங்களைச் சேர்ந்த அணிகள் இப்போட்டியில்  பங்கேற்கின்றன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |